அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ரஷ்ய அதிபர் புடினின் சொத்து மதிப்பு!
ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) உலக அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். விளாடிமிர் புடின் 1952-ம் ஆண்டு ரஷ்யாவின் Saint Petersburg நகரில் பிறந்தார்.
1975ஆம் ஆண்டு ரஷ்யாவின் உளவு நிறுவனமான கே.ஜி.பி.யில் பணியில் சேர்ந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் இதுவரை வெளிப்படையான தகவல்கள் எதையும் தேரிவித்ததில்லை.
இந்நிலையில் ஹெர் மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துக்களை மதிப்பிடும் நிறுவனம் புடினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் இந்திய பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும்.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறிய தகவல்கள் வருமாறு,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் உலகின் 6-வது பணக்கார மனிதர் ஆவார். புதினுக்கு சொந்தமாக 700 கார்கள் உள்ளன. பல ஜெட் விமானங்களையும் வைத்துள்ளார்.
அவரிடம் 58 ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உள்ளன. மேலும் அவரிடம் பறக்கும் கிரெம்ளின் என்ற பெயரில் சொகுசு விமானமும் உள்ளது. இந்த விமானத்தில் அதி நவீன சொகுசு வசதிகள் உள்ளன. இதில் கழிப்பறைகளின் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும் இத்தாலியில் 6 மாடி கொண்ட அதிநவீன சொகுசு படகும் உள்ளது.