உக்ரைன் மேயரை கடத்தி சென்ற ரஷிய படைகள்; வெளியான பரபரப்பு தகவல்!
உக்ரைனின் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெடோரோவ் ரஷியப் படைகளால் கடத்தப்பட்டதாக பரப்ரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ரஷியா - உக்ரைன் இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெடோரோவ் ரஷியப் படைகளால் கடத்தப்பட்டதாக உக்ரைன் உள்விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ குற்றம் சுமத்தியுள்ளார்.
The mayor of #Melitopol Ivan Fedorov was kidnapped, said Anton Gerashchenko
— NEXTA (@nexta_tv) March 11, 2022
According to him, Fyodorov refused to cooperate with the Russian military occupying the city. He was detained at the city crisis center, where he was in charge of the city's life support. pic.twitter.com/mCzfCzDWzQ
இதுகுறித்து அன்டன் கூறுகையில், உக்ரைனின் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெடோரோவ், நகர நெருக்கடி மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார், அங்கு அவர் நகரின் வாழ்க்கை ஆதரவுப் பொறுப்பாளராக பணியாற்றினார்.
இந்நிலையில் அவர் அந்த நகரத்தை ஆக்கிரமித்துள்ள ரஷிய ராணுவத்துடன் ஒத்துழைக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக கூறினார்.