ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றுதிரண்ட நாடுகள்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்து விட்டு அங்குள்ள தமது ராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இன்று புதன்கிழமை (02-03-2022) நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் உக்ரைனுக்கு 193 உறுப்பு நாடுகளில் உக்ரைனுக்கு 141 நாடுகள் ஆதரவாகவும் ரஷ்யா, சிரியா, பெலாரூஸ், வட கொரியா, எரிட்ரீயா ஆகிய 5 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தன.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 35 நாடுகள் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு இல்லாவிட்டாலும், இது சம்பந்தப்பட்ட நாடு மீது உலக அளவிலான அரசியல் அழுத்தத்தைத் தரும்.
Watch the moment when #UNGA voted on a historic resolution on #Ukraine:
— United Nations Foundation (@unfoundation) March 2, 2022
- 141 in favor
- 5 against
- 35 abstentions
View the playback on @UNWebTV: https://t.co/7dBXfzHTSS pic.twitter.com/ba8RLkPzq1
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில்தான் உக்ரைனின் கெர்சன் துறைமுகத்தில் ரஷ்யப் படையினர் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணை, குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.
உக்ரைன் நகரமான மரியூபோல்லில் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஐ.நா.பாதுகாப்புச் சபையால் அழைக்கப்பட்ட ஒரு அரிய அவசரகால அமர்வு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செயல்பாட்டுடன் முடிவுக்கு வந்தது.
இப்படியொரு அவசரகால அமர்வு இதற்கு முன்பு 1997ஆம் ஆண்டில் பாலத்தீனம், ஜெருசலேம் விவகாரத்தை விவாதிப்பதற்காக ஐ.நா சபையால் அழைக்கப்பட்டிருந்தது.