ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாரிய பாதிப்பு! ரணில்
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் இலங்கை தேயிலை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மலையக பகுதிகளில் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படு வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவோ பிரித்தானியாவோ ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்தால், இலங்கை ரஷ்யா அல்லது வேறு நாடுகளுடனான வர்த்தங்களை நிறுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான யுத்தம் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆசியா உலகில் வல்லரசுகள் அமைந்துள்ள கண்டமாக உருவவெடுக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.