ரஷியா - உக்ரைன் போர் உக்கிரத்தில் பதுங்குகுழியில் இடம்பெற்ற திருமணம்!
ரஷியப் படைகளின் ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெற்று வரும் சுழலில் பதுங்குகுழியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
உக்ரைனில் உள்ள ஒடெசா நகரில் உள்ள வெடிகுண்டு இல்லத்தில் விமானத் தாக்குதல் சைரன்கள் காதில் ஒலிக்கும் வகையில் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், சமூக ஊடகத்தில் இந்த திருமணத்தின் போது எடுக்கபட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன, அதில் மணமகள் புன்னகையுடன் மலர்களைப் பிடித்திருப்பதையும், அதே நேரத்தில் மணமகன் ராணுவ உடையில் ஒரு ஆவணத்தில் கையொப்பமிடுவதையும் இந்த திருமணவிழாவைக் கொண்டாட ரொட்டியைப் பகிர்வதையும் காணமுடிகிறது.
இதன்படி முன்னதாக, உக்ரைன் அதிகாரிகள் ரஷிய வீரர்கள் தெற்கு நகரமான கெர்சனைக் கைப்பற்றியதை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


