உக்ரைன் தலைநகரில் தொடரும் பதற்றம்: சாலையில் திரண்ட பொதுமக்கள்
உக்ரைன் ரஷ்யா இடையே 7-வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை முழுமையாக கைப்பற்றுவதற்காக ரஷ்யப் படைகள் தீவிரமான தாக்குதலை நடத்தி முன்னேறி வருகின்றனர்.
மேலும், ரஷ்யப் படையினர் ஸபோரிஷ்யா அணுமின் நிலையத்தை கைப்பற்றப்போவதாக தகவல் வெளியானது. எனவே, அவர்கள் முன்னேறாமல் தடுப்பதற்காக, சேதமடைந்த ரஷ்ய வாகனங்களை சாலையின் நடுவே வைத்து பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

இதேவேளை, ரஷ்யப் படையினருக்கு எதிராக அணுமின் நிலைய ஊழியர்கள் சாலைகளில் திரண்டுள்ளனர்.
இதேவேளை, உக்ரைன்-ரஷ்யா இடையே பெலாரசில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று (02-03-2022) இரவு 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

பெலாரஸ் - போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

