உக்ரைன் படைகளிடம் சிக்கிய கொடூர பெண் ஸ்னைப்பர்! புடினுக்கு பேரிடியான செய்தி
ரஷ்ய துருப்புகளுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற பெண் ஸ்னைப்பர் ஒருவர் உக்ரைன் படைகளிடம் சிக்கியுள்ள விடயம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 41 வயதான Irina Starikova என்ற அந்தப் பெண், செர்பியா நாட்டைச் சேர்ந்தவரோ அல்லது ஸ்னைப்பராக மாறிய கன்னியாஸ்திரீயோ அல்லவாம்.
உண்மையில், Irina கிழக்கு உக்ரைனிலுள்ள, ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களைக் கொண்ட Donetsk பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு 11 வயதான Valeria மற்றும் 9 வயதான Yulia என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அமைதியான பொதுமக்களைக் கொல்பவர்கள் யார் என்றாலும், அவர்கள் பழிக்குப் பழி வாங்கப்படுவார்கள் என உக்ரைன் இராணுவம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், Irina பொதுமக்கள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளதாக கூறப்படுவதால், அவரது தலைவிதியை நிர்ணயிக்கப்போவது உக்ரைன்தான்.
படுகாயமடைந்த தான் இறந்துபோய்விடுவேன் என்று எண்ணி தன்னை ரஷ்ய துருப்புக்கள் கைவிட்டுவிட்டுச் சென்று விட்டதாக Irina கூறியுள்ளார்.
இதேவேளை, போரில் படுகாயமடைந்த வீரர்களைக் கைவிட்டுச் செல்வது ரஷ்ய போர் யுக்தி என கூறப்படுகிறது.