விக்கிபீடியாவுக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தவறாக சித்தரித்ததற்காக விக்கிபீடியாவிற்கு 4 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று ரஷ்யா மிரட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. உக்ரைனில் உள்ள பல பெரிய நகரங்களை ரஷ்யா தாக்கி அழித்து வருகிறது. இருப்பினும், சர்வதேச சக்திகளின் உதவியுடன் உக்ரைனும் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது.
ரஷ்ய மொழி விக்கிப்பீடியா பக்கத்தில் உக்ரைனில் நடந்த இராணுவ நடவடிக்கை பற்றிய தவறான தகவலைப் பதிவு செய்ததற்காக விக்கிப்பீடியாவை 4 மில்லியன் ரூபிள் அபராதம் விதிப்பதாக ரஷ்யாவின் தகவல் தொடர்புக் கட்டுப்பாட்டாளர் மிரட்டியுள்ளார்.
அபராதம் விதிக்கக்கூடிய ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து விக்கிப்பீடியாவில் உள்ள தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கூகுளுக்கு அபராதம் விதிக்கப்போவதாக ரஷ்யா முன்பு மிரட்டியது.
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.