இரகசிய இடத்தில் காதலி - பிள்ளைகளை தாங்க வைத்துள்ள ரஷ்ய அதிபர்! எங்கு தெரியுமா?
உக்ரைனுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது இரகசிய காதலி மற்றும் பிள்ளைகளை சுவிஸ்சர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பான செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரும் ரஷ்யாவின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளில் ஒருவருமான ஆலினா கபேவா (Alina Kabaeva) என்பவரே சுவிட்சர்லாந்தில் இரகசிய இல்லம் ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதியால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 1.5 மில்லியன் உக்ரைனிய மக்கள் அகதிகளாக்கப்பட்ட நிலையில், விளாடிமிர் புடினின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், Alina Kabaeva மற்றும் அவர்களின் நான்கு பிள்ளைகள் சுவிட்சர்லாந்தில் இரகசிய இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Alina Kabaeva வின் பிள்ளைகள் நால்வரும் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு சுவிஸ் கடவுச்சீட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த Lyudmila Putina என்பவரை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட புடின், கடந்த 2013ல் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையிலேயே ஒலிம்பிக் வீராங்கனை Alina Kabaeva என்பவரை புடின் இரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.