கடும் நெருக்கடியில் ரஷ்யா; 300 மில்லியன் டொலர் கடன் கோரிய இலங்கை!
ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.
எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு ரஷ்யாவிடம் கடனுதவி கோரப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள ரஷ்யாவிடமே இலங்கை அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது.
அதேவேளை உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், ரஷ்யாவுக்கு எதிராக இலங்கை வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.