தாக்குதலில் வேகத்தை அதிகரிக்கும் ரஷ்யா! வெளிநாடொன்றின் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா 23 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் இருக்கும் தாங்கள் நாட்டின் தூதரகத்தை முட உள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீதான தாக்குதலின் வேகத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை மூட உள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தென்கொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“லிவிவ் அருகே ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் தூதரகம் செயல்படுவது மற்றும் அதன் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கடினம். எனவே தூதரகத்தை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியதும் கடந்த 03-03-2022ஆம் திகதி தலைநகர் கீவில் இருந்த தங்கள் நாட்டு தூதரகத்தை லிவிவ் நகருக்கு தென்கொரியா மாற்றியது குறிப்பிடத்தக்கது.