இலங்கைக்கான குளிர்கால விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த நாடு!
ரஷ்யாவின் Azur Air விமான சேவையானது இலங்கைக்கான குளிர்கால விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது.
முதல் விமானம் இன்று (நவம்பர் 06) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்துள்ளது.
குறித்த விமானம் இன்றையதினம் காலை 10:05 மணிக்கு 332 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏவியேஷன் சர்வீசஸ் லிமிடெட் விமானத்தை சம்பிரதாய நீர் பீரங்கி வணக்கத்துடன் வரவேற்றது,
அதே நேரத்தில் இலங்கை சுற்றுலா பயணிகளை வாழ்த்துவதற்காக பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் வெனுகோவ், டோல்மோசேவ், க்ரானோயார்ஸ்க் மற்றும் சென் பீட்டர்ஸ்பர்க் சோச்சி ஆகிய பகுதிகளிலிருந்து வாரத்திற்கு 5 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.