வர்த்தக நிலையத்தில் 10 இலட்சம் ரூபா கொள்ளை!
ஹட்டன் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் 10 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று (25.11.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் அதிகாலை வேளையில் விற்பனை நிலையத்துக்குள் நுழைந்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஹட்டன் நகரில் வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.