பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட முதல் காணொளி!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பின்னர் முதன் முறையாக ரோஷினி ஹரிப்ரியன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் பாரதி கண்ணம்மா வரும் இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது.
மேலும், பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதேவேளை இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் தற்போது இந்த தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் திகதி சனிக்கிழமை சூட்டிங்கில் ரோஷினி கலந்து கொண்டு இன்றில் இருந்து சீரியலில் இருந்து விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.
இதனையடுத்து இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தான் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது. தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
இன்று திங்கட்கிழமை பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய வினுஷா தேவி என்ட்ரி கொடுத்த நிலையில் ரோஷினி, காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் பாரதி கண்ணம்மா தொடரில் சில காரணத்தால் என்னால் தொடர முடியவில்லை. இந்த முடிவு உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு தூரம் என்னால் வந்திருக்க முடியாது. எதிர்காலத்திலும் இதே போல எனக்கு ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.