வெவ்வேறு இடங்களில் இருவரை கொலை செய்து இடம்பெற்ற கொள்ளை சம்பவம்
நாட்டின் இரு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று காலை சென்ற இருவர் வீட்டினுள் பெண்ணை கட்டி வைத்துவிட்டு கணவனை கொன்று நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக ஏற்கனவே மாலபே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீதுவையில் இடம்பெற்ற கொலை
இதேவேளை, நேற்று காலை சீதுவை, முகலங்காமுவ பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு உடமைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.