திருகோணமலையில் ஐவர் அதிரடியாக கைது
திருகோணமலையில் பல்வேறுத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை ஐவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொண்டு இன்றைய தினம் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
20 இற்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்
கைதானவர்களிடமிருந்து தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் மற்றும் கையடக்கத் தொலைப்பேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 20 இற்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்களுக்கெதிராக பல வழக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களை திருகோணரலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.