யாழ் சாவகச்சோி வைத்தியசாலையில் கொள்ளை! ஊழியருக்கும் தொடர்பா?
யாழ்ப்பாணம் சாவகச்சோி வைத்தியசாலைக்குள் புகுந்த கும்பலொன்று உழவு இயந்திரத்தில் பொருட்களை கொள்ளையிட்டு சென்ற நிலையில், அந்த சம்பவத்துடன் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்ட பல லட்சம் ருபாய்கள் பெறுமதியான பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த பொருட்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேல் மாடி கட்டிட வேலைக்காக வைக்கப்பட்ட நிலையில் இரவோடிரவாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வைத்தியசாலையில் இரவு நேரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் இருந்த நிலையில் வைத்தியசாலையின் பின்புற வாயிலால் உழவு இயந்திரம் மூலம் அவை எடுத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொருட்கள் ஏற்றப்பட்டு முன்பக்க வாயில் வழியாக வெளியே எடுத்த செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், கொள்ளை சம்பவத்துடன் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவகள் கசிந்துள்ளன.
எனினும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு
வடமாகாண சுகாதார அமைச்சு அசமந்தப் போக்கில் செயல்படுவதாக ஒப்பந்த நிறுவனம் விசனம் வெளியிட்டுள்ளது.