இலங்கையில் சினிமா பணியில் கொள்ளை; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
கண்டியில் பிரபல மாணிக்ககல் விற்பனை நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விற்பனை நிலையத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீல மாணிக்கக்கல்லை சூட்சுமான முறையில் திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணிக்கக்கல்லை பரிசோதிப்பதாக கூறி போலியான நீலக்கண்ணாடியை வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கோடீஸ்வரர் போல் வேடமணிந்த நபர் ஒருவர் மேலும் இரு தரகர்களுடன் விற்பனை நிலையத்திற்கு வந்துள்ளனர். இந்த மோசடி நபர்கள் ஏற்கனவே மாணிக்கக் கல்லின் வடிவத்தைப் பார்த்து அதே வடிவில் போலி மாணிக்கக் கல்லை வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கண்காணிப்பு கமராவில் இருந்து பெறப்பட்ட சந்தேக நபர்களின் படங்களை வைத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கண்டி தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.