தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு ; பரபரப்பை ஏற்படுத்திய திருட்டு கும்பல்
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்று நேற்று இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
இதன்போது பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதி ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பொருளாதார நிலையத்தில் உள்ள மொத்த விற்பனை கடைக்கு துப்பாக்கிகளுடன் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடையில் காசாளராகப் பணியாற்றிய இளம் பெண்ணே துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.