யானை ஒன்றின் தந்தத்தை கொடூரமாக வெட்டியெடுத்த கொள்ளையர்கள்
கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த யானையின், இரு தந்தங்களில் ஒன்றை கொள்ளையர்கள் கோடரியால் வெட்டி எடுத்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இரு யானைகள் பயங்கரமாக மோதிக்கொண்ட நிலையில் இந்த மோதலில் ஒரு யானை காயமுற்றுள்ளது.
காயமடைந்த யானைக்கு வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இனம் தெரியாத கொள்ளையர்கள் சிகிற்சையில் இருந்த யானையின் ஒரு தந்தத்தை கோடரியால் வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாக வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து தற்போது அந்த யானை உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.