ஆடை விற்பனை நிலையத்தில் 27 மில்லியன் ரூபாவுடன் சிக்கிய கொள்ளையன்!
கொழும்பின் புறநகரான கடவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் 27 மில்லியன் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடையின் கூரையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது திருடப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று கடையை உடைத்து உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் காலை ஊழியர்கள் வேலைக்குச் சென்றதால் அவரால் கடையை விட்டு வெளியேற முடியவில்லை.
இதனையடுத்து சந்தேகநபர் பணத்தை வளாகத்திற்குள் மறைத்து வைக்க எண்ணியதாகவும், இரவு நேரத்தில் தப்பிச் செல்லும் நோக்கத்தில் தண்ணீர் தொட்டியில் மறைந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துரப்பணம் கடையின் வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதானவர் 32 வயதான சந்தேக நபர் நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என  பொலிஸார் கூறியுள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        