இலங்கைக்குள் மிக வீரியம் கொண்ட வைரஸ் நுழையும் ஆபத்து!
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பரவிவரும் C 1.2 என அழைக்கப்படும் மிக வீரியம் கொண்ட வைரஸ் பிறழ்வானது, இலங்கைக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வைரஸ் தொடர்பான விசேட நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரசானது , தற்போது ஏனைய சில நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் , குறித்த வைரஸ் இலங்கைக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தரும் போது, இரண்டு தடுப்பூசிகளையும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்களா? தடுப்பூசி பெற்று உரிய காலம் நிறைவடைந்துள்ளனவா? என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் விசேட நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.