இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்று!
இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வினால் பாதிக்கப்பட்ட மேலும் 82 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் சமீபத்திய SARS-CoV-2 பிறழ்வு அறிக்கையின்படி, பெறப்பட்ட 88 மாதிரிகளில் இருந்து 82 புதிய ஒமிக்ரோன் மற்றும் 6 புதிய டெல்டா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பெறப்பட்ட 88 மாதிரிகள் ஜனவரி 4 வது வாரத்தில் சமூகத்திலிருந்து பெறப்பட்டவை என மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
88 ஒமிக்ரோன் தொற்றாளர்களில் இரண்டு முக்கிய ஒமிக்ரோன் வரிசைகளான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றின் கலவை அடங்குகிறது. ஒமிக்ரோன் பிறழ்வின் உப பிரிவுகளானது பின்வரும் இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவையான கொழும்பு மாநகர சபை, கொழும்பு, NIMH, கெஸ்பேவ மற்றும் மத்துகம ஆகிய இடங்களில் BA.1 இன் 30 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் BA.1.1 இன் தொற்றாளர்கள் 22 CMC, கொழும்பு, கெஸ்பேவ மற்றும் மத்துகமவில் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் BA.2 இன் 28 தொற்றாளர்கள் CMC மற்றும் கொழும்பில் கண்டறியப்பட்ட நிலையில் பி.1.1.529 இன் 2 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.