யாழில் இளைஞர், யுவதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் நேற்று (04)தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீரிழிவு தாக்கம்
குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வது காணக்கூடியவாறு உள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக யாழ் மாவட்டம் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
இது அபாய அறிகுறியாகும்.இத்தருணத்தில் இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும் யாழ் மருத்துவ பீட சமுதாயம் மற்றும் குடும்பநல மருத்துவத்துறையும் நடாத்துகின்ற நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது 7 திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ் மருத்துவ பீடத்தில் நடைபெற இருக்கின்றது.
விழிப்புணர்வு செயலமர்வு இந்த நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு செயல் அமர்வுக்கு உலக மருத்துவ நிறுவனம் (IMHO) அனுசரனை வழங்குகின்றார்கள்.இந்த நிகழ்வில் பல்வேறு விதமான நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.
உணவுத் திருவிழா ஆரோக்கிய உணவு தொடர்பான பட்டிமன்றம். மருத்துவ மாணவர்கள் மருத்துவர்கள் கலை நிகழ்வு போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.