மன்னரை மிஞ்சிய ரிக்ஷி சுனக்; எதில் தெரியுமா?
பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக இந்திய வம்சாவழியினரான ரிஷி சுனக் நேற்று பதவியேற்றார்.
ரிக்ஷி சுனக் சொத்து மதிப்பு
இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு மன்னர் சார்ல்ஸின் தனிப்பட்ட செல்வத்தைப்போல் இரு மடங்கு என கூறப்படுகின்றது.
பிரிட்டன் 200 ஆண்டுகளில் காணாத ஆக இளைய பிரதமராக ரிஷி சுனக் விளங்குகிறார். இந்நிலையில் ரிஷி சுனக் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
1960களில் அவருடைய குடும்பத்தினர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர் பிரித்தானியாவின் சௌத்தம்ப்டன் (Southampton) நகரில் 1980ஆம் ஆண்டு அவர் பிறந்தார் தந்தை மருத்துவர், தாயார் சொந்த மருந்துக் கடையை நடத்திவந்தார்.
மூன்று பிள்ளைகளில் ரிஷி சுனக் மூத்தர் ஆவார். பிரித்தானியாவில் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துப் பிரதமரும் இவரே ஆவார்.
2015இல் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது பகவத் கீதையின் (Bhagavad Gita) மீது சுனக் சத்தியப்பிரமாணம் செய்தார் சுனக், அவரின் மனைவி இருவரின் சொத்து மதிப்பு சுமார் 730 மில்லியன் பவுண்ட் (சுமார் 1.189 பில்லியன் வெள்ளி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சொத்து மதிப்பு மன்னர் சார்ல்ஸின் தனிப்பட்ட செல்வத்தைப்போல் இரு மடங்கு ஆகும் . அவர் பெரிய ஸ்டார் வார்ஸ் (Star Wars) ரசிகர் எனவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் அவர் தம்மை Coca-Cola அடிமை என்றும் அவரே வருணிக்கிறார். அந்தக் குளிர்பானத்தைக் குடிப்பதில் அவருக்கு அப்படியோர் ஆசையாம்.