இலங்கையில் அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு!
சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவிலிருந்து மாத்திரமின்றி பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த காலங்களில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, சந்தையில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு காரணமாக அது நீக்கப்பட்டது.
இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்களால் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டதோடு ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபாக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபாக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபாக்கும் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.