மின்தடையால் ஏற்படும் பாதிப்பு; இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை
தொடர் மின்தடை காரணமாக உறைந்த உணவின் தரம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது கருத்து ஊடகங்களுக்கு தெரிவித்த அதன் தலைவர் உபுல் ரோஹன,
துர்நாற்றம், நிறம் அல்லது வித்தியாசமான வடிவத்தில் இறைச்சி உள்ளிட்ட உறைந்த உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது வாங்குவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடந்த இரண்டு வாரங்களில், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற இறைச்சி மற்றும் பாலை விற்பனை செய்த 387 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் 7 மணி நேரம் மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகள் செயல்படாததால் உணவுப் பொருட்கள் மோசமாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது வர்த்தகர்கள் பொறுப்புடன் இருக்குமாறு உபுல் ரோஹன கேட்டுக்கொண்டார்.
அதேசமயம் கடைகளில் உறைந்த உணவுகளை வாங்கும் போது நுகர்வோர் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.