பால்மா பற்றாக்குறையின் காரணத்தை வெளியிட்ட லக்ஷ்மன் வீரசூரிய
நாட்டில் மீண்டும் பால்மா பற்றாக்குறை வருவதாக கூறப்படுகின்றது.
இதனை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கட்டுப்பாட்டாளர்களின் செயற்பாடுகளே இதன் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
பற்றாக்குறையின் காரணம்
இதனை பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் ஆவணங்களை கையளிக்காமை, கடன்சான்று பத்திரங்களை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாகவே பால் மா அடங்கிய 15 கொள்கலன்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பயனாளர்களுக்கு தேவையான பால்மாவினை ஒரே தடவையில் இறக்குமதி செய்து வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.