வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவை!
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதை அடுத்து, மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியில் நடைபெற்ற முந்தைய சந்திப்பின் போது, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதி (இன்று) முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
கண்டி பெலியத்த - மாத்தறை - காலி - மாஹோ - குருநாகல் - இறம்புக்கணை - புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.