ஓய்வு பெற்ற ஆசிரியையும், மருமகனும் செய்த மோசமான செயல் ; விசாரணையில் அம்பலமான விடயம்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியையும் அவரது மருமகனும் கம்பளை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியையின் 33 வயதுடைய மகன் கடந்த 24 ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஓய்வு பெற்ற ஆசிரியையும் அவரது மருமகனும் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மகன் போதைப்பொருளுக்கு அடிமை
67 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியையும் 32 வயதுடைய அவரது மருமகனுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கண்டி - கம்பளை பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.
ஓய்வு பெற்ற ஆசிரியையின் மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் வருமானம் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியையும் முச்சக்கரவண்டி சாரதியான அவரது மருமகனும் இணைந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.