இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா அச்சம்! கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருமா?
நாட்டில் நேற்றையதினம் (26 ) 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை நீண்ட நாட்களின் பின்னர் கடந்தவாரம் யாழில் நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை
எனவே பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதோடு பலர் கோவிட் நோய் தொற்று பற்றி மறந்துவிட்டதால், பயணத்தின் போது முகக்கவசம் அணிவது, சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார பழக்கங்களை அவர்கள் மறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தாளார்.
You My Like This Video
