திருகோணமலை மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றி
இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி திருகோணமலை மாவட்டம்- மூதூர் பிரதேச சபையில் சம்பூர், கட்டைபறிச்சான், இருதயபுரம், கிளிவெட்டி, பள்ளிக்குடியிருப்பு பகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றி முன்னணி வசமானது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி சுயேட்சைக் குழு என்பன தலா இரண்டு வட்டாரங்களை வென்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 2போனஸ் ஆசனங்களையும் தமிழ் மக்கள் கூட்டணி 2போனஸ் ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 1ஆசனத்தையும் பெறுகின்றது.
வாக்கு எண்ணிக்கையில் முதலாம் இடத்தில் தேசிய மக்கள் சக்தியும் இரண்டாம் இடத்தில் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.