ரிக்ஷி சுனக்கை விமர்சித்தவர்களுக்கு பதிலடி!
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக்கை இனரீதியாக விமர்சித்தவர்களுக்கு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரெவர் நோவா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரிட்டன் காலனியாக்கப்படவில்லை எனக்கூறியுள்ளவர், நீங்கள் ரிஷி சுனக்கை கொள்கை ரீதியாக எதிர்க்கவில்லை. அவரது நிறத்தை வைத்து எதிர்க்கிறீர்கள். அவர், பிரிட்டனை இந்தியாவிடம் விற்று விட மாட்டார் எனக்கூறியுள்ளார்.
A special message from Trevor Noah pic.twitter.com/lMM8ll51fu
— The Daily Show (@TheDailyShow) September 30, 2022
தொகுப்பாளர் டிரெவர் நோவாக் பதிலடி
பிரிட்டனின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், 42, நேற்று பொறுப்பேற்றார். பழமைவாத கட்சித் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்ற பின், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
ஆனால், ரிஷி சுனக்கை பிடிக்காத சிலர் அவரை இனரீதியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரெவர் நோவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
' தி டெய்லி ஷோ' என்ற நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,ரேடியோ நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிஷி சுனக்கை இன ரீதியாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தார்.
பின்னர் , அவரிடம் பேசும் ஒருவர், தான் பாகிஸ்தான் அல்லது சவுதி பிரதமராக இருந்தால் நன்றாக இருக்குமா? இந்த விஷயங்கள் முக்கியமானவை. 85 சதவீத வெள்ளை மக்கள் வசிக்கும் பிரிட்டன், அவர்களை பிரதிபலிக்கும் பிரதமரையே பார்க்க விரும்புகிறது எனவும் அவர் கூறுகிறார்.