கட்சியை மீறி வாக்களிக்க தீர்மானம்
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தை மீறி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மக்கள் வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தாம் இந்த தெரிவில் வாக்களிக்கவுள்ளதாக நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் உரிய திட்டங்களை முன்னவைக்காமை காரணமாக ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் தமது கட்சி வாக்களிக்காது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவர் தெரிவித்திருந்தார்.