கனடாவிற்கு எதிரான தீர்மானம்; அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமைக்கு எதிராக இலங்கைவெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ஐலண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
கனடாவின் கூற்றை நிராகரிக்கும் வெளிவிவகார அமைச்சு
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் ஆலோசனையை பெற்ற பின்னர் எவ்வாறான தீர்மானத்தை கொண்டுவருவது என தீர்மானிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் சமீபத்தைய கூட்டத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி ,
கனடாவிற்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் எடுப்பாரா என ஐலண்ட் நாளிதழ் எழுப்பிய கேள்விக்கே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.