முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்
உத்தியோகபூர்வ இல்லங்களைத் தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட 41 உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மட்டுமே திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மொத்தமாக 41 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், உத்தியோகபூர்வ இல்லங்களைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் வெளியிட்டது.
எவ்வாறாயினும், இதுவரை 14 குடியிருப்புகள் மட்டுமே மீள கையளிக்கப்பட்டுள்ளதானது, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள துரிதப்படுத்தியுள்ளது.