முல்லைத்தீவின் முக்கிய பகுதிகளிற்கு அதிரடித் தடை! இறுக்கமடையும் சூழல்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இன்று இரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் வரை இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிப்பதை தடுப்பதற்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரி தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் முடிவில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கோவிட் விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.