பேடிஎம்க்கு ரிசர்வ் வங்கி தடை உத்தரவு; காரணம் இதுதான்
பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவத்தனை செயலியில் முன்னணி வகிக்கு நிறுவனம் பேடிஎம். சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கானோர் இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப்களை நிர்வகிக்க தனித்தனியாக வங்கிகள் செயல்படுகின்றன. ரிசர்வ் வங்கி வகுத்துக் கொடுத்த விதிமுறைகளின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், பணப் பரிவர்த்தனை விதிகளை முறையாகப் பின்பற்றாத விவகாரத்தில் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் தணிக்கை ஆய்விற்குப் பின் புதிய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.