யாழில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி பாலாவோடை பகுதியில் நேற்றிரவு 48 வயதுடைய ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலை
தூக்கிட்ட வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் அவர்கள் தூக்கில் தொங்கிய வரை கண்ட போது அறுத்து விழுத்தினர் இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் வீடு தூக்கிட்ட வீட்டிற்கு 300 மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.