வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியிடம் கோரிக்கை!
வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என வங்கி ஆளுநர் கலந்துரையாடலில் தெரிவித்ததாக சங்கத்தின் தலைவர் என்.கே.கமகே தெரிவித்தார்.
மேலும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால், வாகன இறக்குமதி 2021 மே 24 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.