கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள வேண்டுகோள்!
கொழும்பு மாநகரசபை எல்லையில் இதுவரை பதிவு செய்யப்படாத அனைத்து சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கொழும்பு மாநகரசபை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மாநகரசபை வெளியிட்டிருக்கும் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்தில் உள்வாங்கி இருப்பதாகவும் மாநகரசபை அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் வரிப்பண அறிக்கையில் இதுவரை அதன் உரிமையை பதிவு செய்துகொள்ளாத சொத்து உரிமை கோரும் உரிமையாளர்கள் தங்களது சொத்து உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகரசபை அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.
அதில் 2021 நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்வும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2022 வருடத்தில் வரிபணம் செலுத்தும்போது அதன் பற்றுச்சீட்டு, உரிமையாளரின் பெயருக்கு விநியோகிப்பதற்கே, இதுவரை பதிவு செய்யாத சொத்துக்களை அதற்கு உரிமை கோருபவர்கள் விரைவாக பதிவு செய்துகொள்ளுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் மாநகரசபை தெரிவித்துள்ளது.