இனி பாதுகாப்பு அளிக்க முடியாது... கோட்டாபயவிடம் சிங்கப்பூர் அரசு விடுத்த பகிரங்க கோரிக்கை!
கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷ மாலைத்தீவுக்கு தப்பி சென்றதுடன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றதுடன், அங்கு தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை நேற்றைய தினம் (16-07-2022) சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், (Kasi Viswanathan Shanmugam) சிங்கப்பூர் அரசால் இனி பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறும்படி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.