தமிழர் பகுதியில் பல தடவைகள் கைதானவர் செய்த செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பிரதேசத்தில், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்குச் சென்று சோதனையிட்டனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என்றும், இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்துள்ளவர் என்பதும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.