வெளிநாட்டு முதலாளியுடன் நாடு திரும்பிய மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த செயலால் அதிர்ச்சி!
பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்துவந்த நிலையில், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை மனைவி நாட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஆத்திரமடைந்த கணவன் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மொனராகலையில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கணவன் - மனைவிக்கு இடையில் தகராறு
குவைத் நாட்ட்டிற்கு மனைவி வேலைக்கு சென்ற நிலையில், நாட்டுக்கு திரும்பி வந்துள்ளார். இதன்போது தான் வேலை செய்த வீட்டின் எஜமானரான 80 வயது முதியவரை மனைவி அழைத்து வந்த நிலையில், தங்கும் இடம் தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கணவன் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த குவைத் நாட்டவர் மற்றும் சந்தேகநபரின் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிபில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தீயை அணைத்துள்ள போதும் , வீடு மற்றும் உடமைகள் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் தப்பியோடிய கணவரை பொலிசார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.