வாடகைக்கு வீடு எடுத்து மோசமான தொழில்; பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்!
வாடகைக்கு வீடு எடுத்து தங்கி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கம்பஹா - உக்கல்பட பகுதியில் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர்
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வீடொன்றை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடமிருந்து 2 ஆயிரம் போதை மாத்திரைகள், 500 கிராம் ஐஸ், 50 கிராம் ஹெரோயின் மற்றும் 500 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.