பிரதேச செயலக சொத்துக்களை சேதப்படுத்தியவருக்கு விளக்கமறியல்
ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியல்
ஹம்பாந்தோட்டை - பதகிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் , இவர் நேற்று (06) தனது தந்தையின் பிறப்பு சான்றிதழ் நகல் பெறுவதற்காக பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வந்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
எனினும், ஆவணங்களைப் பெறுவதற்கு நேரமாகியதால் ஆத்திரமடைந்த குறித்த நபர், அலுவலகத்தில் பலரிடம் கேட்டும் உரிய பதில் அளிக்காததால், அலுவலகத்தில் இருந்த நாற்காலியை எடுத்து மேசை, ஜன்னல்களை தாக்கியுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.