ஆப்கான் அனர்தத்தில் எஞ்சிய குட்டித் தேவதை
ஆப்கானில் நேற்றையதினம் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்காணோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் தரைமட்டமானதுடன் 1000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இடிபாடுகளுக்கு அடியிலும் வெளியிலும் மக்கள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணியில் பெண் குழ்ந்தை ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். இந்தக் குட்டித் தேவதை மட்டுமே இக்குழந்தையின் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினர் என கூறப்படுகின்றது.
This little angel is the only remaining alive member of her family, locals couldn’t find any other member of her family. There r many houses levelled to the ground due to landslide & people remained stuck under rubble and in outlying areas.
— Rashid Khan (@rashidkhan_19) June 23, 2022
PLZ Donate https://t.co/08jToN4YAC pic.twitter.com/7bmY454KuZ
அதேசமயம் உள்ளூர்வாசிகளால் அவரது குடும்பத்தில் வேறு எந்த உறுப்பினரையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.