யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் உட்பட விடுதலையான 16 பேரின் விபரங்கள் இதோ!
முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட, 93 கைதிகளை பொசன் பெளர்ணமி தினத்தையொட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுதலை செய்துள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரமும் வெளிவந்துள்ளது.
அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடராஜா சரவணபவன், புருஷோத்தமன் அரவிந்தன், இராசபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், நளன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன்,சிவப்பிரகாசன் சிவசீலன்,மயில்வாகனம் மாடன், சூர்யகுமார் ஜெயச்சந்திரன் ஆகியோரும்,
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சைமன் சந்தியாகு, ராகவன் சுரேஸ், சிறில் இராசமணி,எம்.எம். அப்துல் சலீம், சந்தன் ஸ்ராலின் ரமேஸ்,கபிரியேல் எட்வேட் யூலியன் ஆகியோரும் , மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் ரமேஸ் ஆகியோருமே இவ்வாறு பொதுமன்னிப்பில் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர் .