மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று ஊர்திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! உறவுகளே ஏமாற்றிய கொடுமை
மட்டக்களப்பு தலை நகர் பகுதியில் தனது சகோதரனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை திரும்பெற வீட்டுக்குச் சென்ற போது தமையனை சகோதரர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திரும்பி வந்த மட்டு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் மகள் ஆகிய 4 பேரை இன்று புதன்கிழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடுத்த கடனை கேட்டதால் தாக்குதல்
தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று அந்த பணத்தில் 6 அரை இலட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கடனை திருப்பி கேட்டதில் வாய்த்தர்க்கம் முற்றியதில் அவர் மீது அவரது சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் மகள் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்கள் இரு ஆண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.