தமிழர் பகுதியில் பட்டையை கிளப்பும் கருங்கோழி வளர்ப்பு! (Video)
தமிழர் பகுதியில் அமைந்துள்ள Reecha Organic Farm வெறும் பொழுது போக்கு இடமாக மட்டுமல்லாது நம் பாரம் பரியங்களை எடுத்துக்கூறுவதாகவும் அமைந்துள்ளது.
கடந்துபோன நமது நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி என்றும் Reecha Organic Farm ஐ கூறலாம். நாட்டு திப்பிச்செல்ல என்ன இருக்கின்றது என நினைப்பில் உள்ளவர்களை மாற்றி நம் தாயகத்திற்கு செல்லும் மனநிலையை ஈர்ப்பதாக Reecha Organic Farm அமைந்துள்ளது.
உணவு, நீச்சல் தடாகம் என்பவற்றுடன் நீங்கள் தங்கி நின்று இயற்கையை ரசிக்கும் அளவுக்கு Reecha Organic Farm உள்ளது. அந்தவகையில் கருங்கோழி வளர்ப்பிலும் அசத்தி வருகின்றது.
கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கருங்கால் கோழி, கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அதிக நோய் எதிர்ப்புச்சக்தி உள்ள சத்தான உணவுகளின் கரும்கோழியும் இடம்பிடித்துள்ளது.